Jan 11, 2010

விடுதலைப்போரில் தமிழகம்;- ம.பொ.சிவஞானம்

விடுதலைப்போரில் தமிழகம்;- ம.பொ.சிவஞானம் ">
நன்றி : சீராசை சேதுபாலா

தமிழக அரசோ, ஓர் பல்கலைக்கழகமோ செய்யவேண்டிய பணியைத் தனி ம்னிதராகச் செய்து முடித்து விட்டேன். இதை நினைக்கும்போது இமயத்தின் உச்சி்மீது நிற்கின்ற பெருமிதம் எனக்கு ஏற்படுகின்றது.- டாக்டர்.ம.பொ.சிவஞானம். (தமிழகம் என்றிருந்தாலும் இந்திய வரலாற்றையே முழுமையாகச் சித்தரிக்கின்றது.)
தமிழுக்காக-தமிழருக்காக-தமிழாய்-வாழ்ந்த-மாமனிதர்-ம.பொ.சி.-சிலம்புச் செல்வர் - இவர் இல்லையேல் திருத்தணியும் திருப்பதிபோல் பறிபோயிருக்கும். விடுதலைப் போரில் தமிழகம் அவரது அற்புதப் படைப்பு. பள்ளிக்கூடமே செல்லாத ம.பொ.சி. பல ஆங்கில நூல்களையெல்லாம் அலசி ஆராய்ந்து எழுதிய வரலாற்றுப் பெட்டகம் இந்தப் புத்தகம். இரு தொகுதிகளாக 2006 ஆகஸ்டு மாதம் வெளிவந்து்ள்ளன.தியாகராய நகர், இராமநாதன் தெருவில் உள்ள,எல்.கே.எம்.பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது. ம.பொ.சி.-யை எத்தனைபேர் நினைத்துப் பார்க்கின்றோம்? நினைவூட்டிக்கொள்ளவே இந்தப் பதிவு. புத்தகத்திற்குள் சென்றால் எதனைச் சொல்வது எதனை விடுவது என்பதில் சிக்கல். எனவே, அவர் சுட்டிக்காட்டும் தியாகிகளை மட்டும் இங்கு மீண்டும் பட்டியல் இட்டு்ள்ளேன். பார்க்கும் வலைப்ப்பூ அன்பர்களாவது இது குறித்த எண்ணங்களில் சிறிது நேரம் செலவிட்டால் அதுவே அவருக்கு நாம் செலுத்தும் கண்ணீர் அஞ்சலி.
தூக்குத் தண்டனை பெற்றவர்கள்:-
1.வீரபாண்டிய கட்டபொம்மன் 1799
2.சிவசுப்பிரமணிய பிள்ளை 1799
3.சௌந்தர பாண்டியன் 1799
4.ஊமைத்துரை 1801
5.பெரிய மருது 1801
6.சின்ன மருது 1801
7.ராஜகோபால் (குலசேகரன் பட்டினம் லோன் கொலை வழக்கு) 1943
ஆயுள் தண்டனை அடைந்தவர்கள்:-
1.வ.உ.சிதம்பரம் பிள்ளை 1908
2.பெருமாள் (ரயில்வே தொழிலாளி) 1928
3.பி.எஸ்.சின்னதுரை (கோவை விமானதள எரிப்பு) 1943
4.இராம.பாஸ்கர சேதுபதி (கோவை விமானதள எரிப்பு) 1943
5.எல்.என்.ராமராஜ் (கோவை விமானதள எரிப்பு) 1943
6.காசிராஜன் (குலசேகரன்பட்டினம் லோன் கொலை வழக்கு) 1943 7.ஏ.பெஞ்சமின் 1943
8.ஆர்.செல்லத்துரை 1943
9.பி.தருமம் கோவில் பிள்ளை 1943
10.தங்கைய நாடார் 1943
11.சிவந்திக்கனி என்ற முத்துமாலை நாடார் 1943
நாடுகடத்தப்பட்டவர்கள்:-
1.சாத்தூரப்ப பிள்ளை 1799
2.சௌந்திரலிங்க நாயக்கர் 1799
3.ஆறுமுகம் பிள்ளை 1799
4.கோமதிநாயகம் பி்ள்ளை 1799
5.தருமபெருமாள் பிள்ளை 1799
6. துரைசாமி 1801
7.மருதிருவரின் குடும்பத்தினரும், உறவினரும்-70பேர் 1801
தற்கொலை புரிந்துகொண்டவர்கள்:-
1.வீரன் வாஞ்சிநாதன் 1911
2.புனலூர் வெங்கடேச ஐயர் பி.ஏ.பி.எல். 1911
3.செங்கோட்டை தருமராச ஐயர் 1911
காணாமற்போனவர்:-
1.மாடசாமிப் பிள்ளை

ஒத்துழையாமை இயக்கம், வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரம், சைமன் கமிஷன் பகிஷ்காரம், உப்புச்சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு, ஆகஸ்டுக் கிளர்ச்சி, பம்பாய் வேலைநிறுத்த ஆதரவுக் கிளர்ச்சி ஆகிய அனத்துக் காலக்கட்டங்களிலும் பிரிட்டிஷார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் ஏராளம்.

INA படையினர் பர்மா எல்லைவழியாக இந்தியாவின் மீது படையெடுத்தபோது நடந்த யுத்தத்தில் மாண்டோர் ஏராளம்.
தென்னாப்பிரிக்கச் சிறையில் மாண்ட வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகியோர்.
அலை கடலுக்கப்பால் சிங்கப்பூர், ரங்கூன் (பர்மா), பிரின்ஸ் ஆப் வேல்ஸ், அந்தமான் தீவுச்சிறைச்சாலைகள், மாண்ட் காமரி, மூல்டான், நாபா (ப்ஞ்சாப்),அமராவதி, நாகபுரி, நாசிக்(மகாராஷ்ட்ரம்), சபர்மதி(குஜராத்), ராஜமகேந்திரபுரம் (ராஜமுந்திரி), பெல்லாரி, விசாகப்பட்டினம்,(ஆந்திரம்), திருவனந்தபுரம்,கல்ளிக்கோட்டை,கண்ணனூர் (கேரளம்) டில்லி ஆகிய மொழி வேறுபாடுடைய இடங்களில் இருந்த சிறைச்சாலைகளிலும் தமிழகத்துத் தேசபக்தர்கள் அல்லலுற்றனர். இறந்தோர் எண்ணிக்கைகும் கணக்கு் இல்லை.
என்று தணியும் எந்தன் ஏக்கம்? வட நாட்டில் ஹரித்வாரில் சுதந்திர தேவிக்குத் திருக்கோவில் உள்ளது. அங்கு வட இந்தியத் தலைவர்களுடய உருவப் பொம்மைகள், சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தென்னிந்தியத் தலைவர்களில் முக்கியமான / சாதரணமான ஒருவர் கூட வைக்கப்பட வில்லையே ஏன்? இதை எந்த ஒரு தமிழகத் தலைவர்களோ-பாராளு்மன்ற உறுப்பினர்களோ தட்டிக் கேட்டதாகத் தெரியவில்லயே ஏன்?
தென்னிந்தியாவில் வட இந்தியத் தலைவர்களுக்குச் சிலைகள், ஊர்கள், புரங்கள், தெரு்க்கள் இருக்கின்றன். ஆனால், வடக்கே ...பாராளுமன்றத்தில் ஓரிருவர் தவிர... இந்தியாமுழுவதும் இருக்கும் வலைப்பதிவாளர்கள் ஆங்காங்கு உள்ளனவற்றைத் தெரிவிப்பார்களா? இருந்தால்தானே சொல்வதற்கு? தமிழன்தானே ..ஏமாளி?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.