Jan 11, 2010

ம.பொ.சி பற்றி ஞாநியின் பதில்

ம.பொ.சி நூற்றாண்டு விழா இறுதியில் அவர் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவதாக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அறிவித்திருப்பது வரவேற்கவேண்டிய நடவடிக்கை அல்லவா?
குமரகுருபரன்,திருவல்லிக்கேணி
ஆம். பாராட்டுக்குரியதுதான். ஆனால் சிலப்பதிகார பக்தி தவிர கருணாநிதிக்கும் ம.பொ.சிக்கும் வேறெந்த ஒற்றுமையும் கிடையாது. ம.பொ.சி தமிழ் தேசியம் சார்பாக சிறப்பான வாதங்களை இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே வைத்த முன்னோடி. அதே சமயம் இந்திய தேசியத்தை ஆழமாக நம்பியவர். கருணாநிதிக்கு இரண்டிலும் ஆழமான நம்பிக்கைகள் கிடையாது. தன் அவ்வப்போதைய அரசியல் நோக்கங்களுக்காக அவற்றை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்ளும் அறிவுக் கூர்மை மட்டுமே அவருக்கு உண்டு. ம.பொ.சி, பெரியார் போன்றோர் ஓரணியில் இருந்திருந்தால் தமிழக அரசியல் சூழல் வேறு விதமாக இருந்திருக்கலாம். இந்தியா உண்மையான தேசிய இனங்களின் சமமான கூட்டாட்சியாக மலரும் வாய்ப்புக்கும் அது உதவியிருக்கலாம். முறையானபடிப்பு கிட்டாதபோதும் அச்சு கோர்ப்பவராகத் தொடங்கி ஆழ்ந்த சிந்தனையாளராக, எழுத்தாளராக தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட ம.பொ.சியை வெறும் கோமாளியாக சோ சித்திரித்ததை நினைக்கும்போதெல்லாம் எரிச்சலாக இருக்கிறது. இப்போது அவரும் ம.பொ.சியின் அரிய தேசிய குணங்களைப் பாராட்டி எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம்.
- ஞாநி
நன்றி : www.keetru.com

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.