Jan 11, 2010

சென்னையில் ம.பொ.சி சிலை: தியாகிகள் சங்கம் கோரிக்கை


திண்டுக்கல், செப். 12: திண்டுக்கல்லில் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழக எல்லை மொழிப்போர் தியாகிகள் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் ராமு. ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.7.2006 அன்று சென்னையில் நடைபெற்ற ம.பொ.சி. நூற்றாண்டு விழாவில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார், வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி அவரின் 14-ஆவது நினைவு தினம் வருகிறது. அன்று சென்னை மாநகராட்சி கட்டடத்திற்கு ம.பொ.சியின் பெயரும், அதே நாளில் அவரது உருவச் சிலையையும் திறக்க வேண்டும்,
ம.பொ.சிவஞானம், ப.ஜீவானந்தம் ஆகியோரின் பெயர்களிலும் அரசு விருதுகள் வழங்கப்பட வேண்டும்,
கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கப் பாடுபட்ட மார்ஷல் நேசமணி திருவுருவம் பொறித்த அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட வேண்டும்,
எல்லைக் காவலர் - மொழிக் காவலர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருப்பதால் பேருந்தில் பயணம் செய்வது சிரமமாக உள்ளது, எனவே முதல்வர், மத்திய அரசுக்கு ரயில் மூலம் இலவச பயணம் செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

நன்றி:www.dinamani.com

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.