Jul 13, 2010

ம. பொ.சிக்கு மனைவியுடன் சண்டை!

நன்றி: ஆனந்த விகடன்

ம.பொ. சிவஞானம் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் இடையே ஒரு சமயம் பெரிய தகராறு ஏற்பட்டது.

ம.பொ.சிக்குப் பெண் குழந்தை பிறந்தபோது, அதற்கு ‘மாதவி’ என்று பெயர் சூட்டினார். இந்தப் பெயரை அவர் மனைவி எதிர்த்தார். சிலப்பதிகாரத்தில் மாதவி பரத்தை என்று சொல்லப்பட்டிருப்பதால், அது நல்ல பெயர் இல்லை என்பது மனைவியின் வாதம். ம.பொ.சி தம் சிலப்பதிகார ஞானத்தை மனைவியிடம் காட்டி, மாதவி கண்ணகி போல கற்புக்கரசி என்று சொல்ல முடியா விட்டாலும், ஒழுக்கமானவளே என்று வாதாடினார். மனைவி மூன்று நாட்கள் பட்டினியாகச் சத்யாக்கிரகம் செய்து பார்த்தார். அதற்கும் சிலம்புச் செல்வர் விட்டுக் கொடுக்கவில்லை. கடைசியில் ம.பொ.சிக்குத் தான் வெற்றி! மகளுக்கு மாதவி என்றே பெயரிட்டார்கள்.

(சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீட்டு விழாவில் ம.பொ.சி.யே வெளியிட்ட தகவல் - ஆனந்த விகடன் 1965)