Jul 31, 2010

ஏகாதிபத்தியப் பாதையில் காங்கிரசு

( 'தமிழ் முரசு' 15.01.1948 இதழில்)

இந்தியா சுதந்திரம் பெற்றால், தமிழகம் சுயாட்சி நாடாகும். தமிழருக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படும் என்ற உறுதியான நம்பிக்கையுடனேயே தமிழர் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபட்டனர். ஆங்கிலேயரை விரட்டிய பின்னர், காங்கிரசு மேலிடத்தார், ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியப் போக்கிலேயே தாங்களும் செல்வதென்ற முடிவுக்கு வந்து விட்டனர். அசோகரது அறவழிச் சின்னத்தைத் தேசியக்கொடியில் பொறித்துக் கொண்டு, தமிழர் விஷயத்தில் அசோகரும் செய்ய இயலாததைச் செய்யத் துணிந்து விட்டனர்.

- சிலம்புச் செல்வர் ம.பொ.சி