Sep 15, 2010

மூன்று உடல்


நன்றி: vallalarspace.com/vumt , 28 Oct 2009
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, ம.பொ.சிவஞானம்

ஒருவன் சாதாரண மனிதனாயிருந்து பூரண சன்மார்க்கியாவது வரை மூன்று உடல் பெறுகிறான் என்கிறார் இராமலிங்கர்.

ஒருவன், எல்லா உயிர்களையும் சமமாகக் கருதி, அவற்றிடையே மாறாத அன்பு செலுத்தி , ஜீவ காருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் அவன் அன்புடல் பெறுகிறான்.

பின், பக்தியாலும் மாறாத தியானத்தாலும் அவன் உள்ளத்தில் இறைவன் தங்கும் நிலை பெற்ற போது, முன்பு பெற்ற அன்புடல் அருளுடலாக மாறுகின்றது,

அதற்குப்பின் , மரணமிலாப் பெருவாழ்வைப் பெறுங்கால், அருளுடல் பேரின்ப முத்தியிற் கலந்த இன்புடலாகின்றது. இதனை, ஸ்வர்ணதேகம், (பொன் மேனி )என்றும் கூறுகிறார் வள்ளலார். இத்தகைய பூரண சன்மார்க்கியாக மாணிக்கவாசகரைக் கருதியவர் போல்,

“:மன்புருவ நடுமுதலா மனம்புதைத்தௌ நெடுங்காலம்
என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க
அன்புருவம் பெற்றதன் பின் அருளுருவம் அடைந்துபின்னர்
இன்புருவாம் ஆயினைநீ எழில்வாத வூர் இறையே”:

என்று வதவூர் சன்மார்க்கியரை வடலூர்ச் சன்மார்க்கியர் பாடுகின்றார். ‘ வாதவூர் இறையே” என்றதால் மணிவாசகர் பூரண சன்மார்க்கிக்குரிய தெய்வ நிலை பெற்றார் என்பது புலனாகும். ‘பற்றருத்தல் என்ற பகுதியில்.

“மன் செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே
வான்செய்து கொண்டது நான் செய்து கொண்டேன்
முன்செய்து கொண்டதும் இங்ஙனங் கண்டீர்
மூவகை யாம் உடல் ஆதியை நுமது
பொன்செய்துகொண்ட பொதுவினில் ஆடும்
பொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
என்செய்து கொண்டாலுஞ்செய்து கொள்கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பி மெய் இன்பந்ததீரே

என்னும் பாடலிலும் பூரண சன்மார்க்கி பெறும் மூவகையுடலையாம், அவற்றுள் மூன்றாவதான பொன்னுடலையும் அதாவது ஒளியுடலையும் குறிப்பிடுகின்றார்.

சான்றாக ‘ மஹோபதேசம், என்னும் பகுதியில் இறைவனது திருவருட் பெருமையைப் பேசுமிடத்து,

“ இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம்.,பெறுவதற்கு தடையில்லை. ‘ சந்ததமும் வேதமொழி யாதொன்றுபற்றிஒன் அதுதான் வந்து முற்றும் என்னும் பிரமாணத்தால் உணர்க என்கிறார்,. இதில் வரும் பிரமாணம் , கருணாகரக் கடவுள்’ என்ற தலைப்பில் தாயுமானவர் பாடியுள்ள ஒரு பாடலில் முதலிரண்டு வரிகளாகும்.

எனவே, தாம் கொண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமைக் கொள்கை காரணமாக தாயுமானவரைப் பற்றி வள்ளலார் செய்துள்ள விமர்சனம், அந்த ஞானியை எவ்விதத்தும் குறைத்து மதிப்பிட்டதாகாது. அவரை உவமை காட்டி, அவரது கால்த்துச் சமய நிலையை விமர்சிப்பதாகவே கொள்ளவேண்டும். வள்ளலாருக்கு முன்பே, சமய சமரச உணர்வுக்கு வித்திட்ட பெருமை தாயுமானவரையே சாரும். வள்ளாரின் வாரிசாக வாழ்ந்து மறைந்த மகாகவி பாரதியார் தாயுமானவரைப்பற்றிக் கூறுவதாவது

“ தாயுமானவரைப்போன்ற ஞான்க் ஒருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால், அவரைப் பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் இருக்க மாட்டான். அவரது இனிய இசை நிரம்பிய அமிருத கவிதைகளைக் கற்றேனும் , அவரது சரித்திரம் முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக்கணக்கான மூடர்கள், தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும், கூறிக்கொண்டு திருகிறார்கள்.

பாரதியாரின் இந்தக் கருத்து வள்ளலார் உள்ளத்திற்கும் பொருந்துவதே.சமரச சுத்த சன்மார்க்கத்தில் ஆண் – பெண் என்ற பால் வேற்றுமை வழி ஏற்றத் தாழ்வோ இழிவு – சிறப்போ கருதச் சிறிதும் இடமில்லை. ஆண் – பெண் சமத்துவமே சுத்த சன்மார்க்கத்தின் குறிக்கோள், ஆண்மையிலே பெண்மையும், பெண்மையிலே, ஆண்மையும் கலந்திருப்பதாகக் கூறுகின்றார் அடிகள்,. மற்று, ஆண் – பெண் பால் வேற்றுமை உடலைப் பொறுத்ததேயன்றி ஆன்மாவைப் பொறுத்ததன்று இதனை இராமலிங்க அடிகளாரே கூறக் கேட்போம்.

“ ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும் இருக்கும் விதம் எவ்வாறென்றில் – பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், பிரகிருதி, ஆன்மவென்னும் 7 – ம் கூடி சுக்கில சுரோணித சம்பந்த சப்த தாதுவாய், சிருஷ்டிக்குக் காரணமாயின., ஆதலால் ஆண்பாகம் சேராது பெண்ணுருவப்படாது, பெண்பாகம் சேராது ஆணுரு வப்படாது. மேலும் ரூப பேத்தைப் பெண்ணாண் என்பது அறியாமை.

பெண் – ஆண் என்னும் நாம்பேதம் வருவானேன்? அறிவின் உயர்ச்சி தாழ்ச்சியால் என்க, ஆன்ம அறிவு ஆண், ஜீவ அறிவு பெண், ஆன்ம அறிவு என்பதும் ஜீவ அறிவு என்பதும் புத்தி அறிவும் மன அறிவுமாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.