Sep 14, 2010

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பிறந்தநாள் விழா

நன்றி: தினமணி, 28 Jun 2010
திருத்தணி, ஜூன் 27: தமிழ்நாடு கிராமணிகுல முன்னேற்ற நல சங்கமும், தமிழ்நாடு நாடார் பேரவையும் இணைந்து ம.பொ.சி.யின் 105வது பிறந்தநாள் விழாவை சனிக்கிழமை கொண்டாடின.

பல போராட்டங்களை நடத்தி சிறை சென்று சென்னையும், திருத்தணியையும் மீட்டு தந்த தியாகச் செம்மல் சிலம்பு செல்வர் ம.பொ. சிவஞானத்தின் 105 பிறந்தநாள் விழா திருத்தணியில் கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிராமணிகுல முன்னேற்ற நலச்சங்க தலைவர் கல்பாக்கம் த. மோகன் தலைமை வகித்தார். சங்க அமைப்பாளர் கே.ஜோதி பிரகாஷ் முன்னிலை வகித்தார். பொதுசெயலர் வீ.மகாதேவன், செயலர் வீ.சங்கர், ரவிகரன் ஆகியோர் வரவேற்றார்.

பின்னர் திருத்தணி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள சிலம்புச் செல்வர் மா.பொ. சிவஞானம் அவரது திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.

விழாவில் திருத்தணி பேரவை பொருளாளர் இ.ஜெ.பாண்டியன் செயலர் ஆர்.காசிநாதன், நிர்வாகக் குழு உறுப்பினர் பி.சிவசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.