Sep 8, 2010

விடுதலைப்போரில் தமிழகம்;- ம.பொ.சிவஞானம்


தமிழக அரசோ, ஓர் பல்கலைக்கழகமோ செய்யவேண்டிய பணியைத் தனி ம்னிதராகச் செய்து முடித்து விட்டேன். இதை நினைக்கும்போது இமயத்தின் உச்சி்மீது நிற்கின்ற பெருமிதம் எனக்கு ஏற்படுகின்றது. - டாக்டர்.ம.பொ.சிவஞானம்.
(தமிழகம் என்றிருந்தாலும் இந்திய வரலாற்றையே முழுமையாகச் சித்தரிக்கின்றது.)

தமிழுக்காக-தமிழருக்காக-தமிழாய்-வாழ்ந்த-மாமனிதர்-ம.பொ.சி.-சிலம்புச் செல்வர்-இவர் இல்லையேல் திருத்தணியும் திருப்பதிபோல் பறிபோயிருக்கும்.

விடுதலைப் போரில் தமிழகம் அவரது அற்புதப் படைப்பு. பள்ளிக்கூடமே செல்லாத ம.பொ.சி. பல ஆங்கில நூல்களையெல்லாம் அலசி ஆராய்ந்து எழுதிய வரலாற்றுப் பெட்டகம் இந்தப் புத்தகம். இரு தொகுதிகளாக 2006 ஆகஸ்டு மாதம் வெளிவந்து்ள்ளன.தியாகராய நகர், இராமநாதன் தெருவில் உள்ள,எல்.கே.எம்.பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது. ம.பொ.சி.-யை எத்தனைபேர் நினைத்துப் பார்க்கின்றோம்? நினைவூட்டிக்கொள்ளவே இந்தப் பதிவு. புத்தகத்திற்குள் சென்றால் எதனைச் சொல்வது எதனை விடுவது என்பதில் சிக்கல். எனவே, அவர் சுட்டிக்காட்டும் தியாகிகளை மட்டும் இங்கு மீண்டும்
பட்டியல் இட்டு்ள்ளேன். பார்க்கும் வலைப்ப்பூ அன்பர்களாவது இது குறித்த எண்ணங்களில் சிறிது நேரம் செலவிட்டால் அதுவே அவருக்கு நாம் செலுத்தும் கண்ணீர் அஞ்சலி.

தூக்குத் தண்டனை பெற்றவர்கள்:-
1.வீரபாண்டிய கட்டபொம்மன் 1799
2.சிவசுப்பிரமணிய பிள்ளை 1799
3.சௌந்தர பாண்டியன் 1799
4.ஊமைத்துரை 1801
5.பெரிய மருது 1801
6.சின்ன மருது 1801
7.ராஜகோபால் (குலசேகரன் பட்டினம் லோன் கொலை வழக்கு) 1943

ஆயுள் தண்டனை அடைந்தவர்கள்:-
1.வ.உ.சிதம்பரம் பிள்ளை 1908
2.பெருமாள் (ரயில்வே தொழிலாளி) 1928
3.பி.எஸ்.சின்னதுரை (கோவை விமானதள எரிப்பு) 1943
4.இராம.பாஸ்கர சேதுபதி (கோவை விமானதள எரிப்பு) 1943
5.எல்.என்.ராமராஜ் (கோவை விமானதள எரிப்பு) 1943
6.காசிராஜன் (குலசேகரன்பட்டினம் லோன் கொலை வழக்கு) 1943
7.ஏ.பெஞ்சமின் 1943
8.ஆர்.செல்லத்துரை 1943
9.பி.தருமம் கோவில் பிள்ளை 1943
10.தங்கைய நாடார் 1943
11.சிவந்திக்கனி என்ற முத்துமாலை நாடார் 1943

நாடுகடத்தப்பட்டவர்கள்:-
1.சாத்தூரப்ப பிள்ளை 1799
2.சௌந்திரலிங்க நாயக்கர் 1799
3.ஆறுமுகம் பிள்ளை 1799
4.கோமதிநாயகம் பி்ள்ளை 1799
5.தருமபெருமாள் பிள்ளை 1799
6. துரைசாமி 1801
7.மருதிருவரின் குடும்பத்தினரும், உறவினரும்-70பேர் 1801

தற்கொலை புரிந்துகொண்டவர்கள்:-
1.வீரன் வாஞ்சிநாதன் 1911
2.புனலூர் வெங்கடேச ஐயர் பி.ஏ.பி.எல். 1911
3.செங்கோட்டை தருமராச ஐயர் 1911

காணாமற்போனவர்:-
1.மாடசாமிப் பிள்ளை

ஒத்துழையாமை இயக்கம், வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரம், சைமன் கமிஷன் பகிஷ்காரம், உப்புச்சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு, ஆகஸ்டுக் கிளர்ச்சி, பம்பாய் வேலைநிறுத்த ஆதரவுக் கிளர்ச்சி ஆகிய அனத்துக் காலக்கட்டங்களிலும் பிரிட்டிஷார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் ஏராளம்.

நேதாஜி INA படையினர் பர்மா எல்லைவழியாக இந்தியாவின் மீது படையெடுத்தபோது நடந்த யுத்தத்தில் மாண்டோர் ஏராளம்.

தென்னாப்பிரிக்கச் சிறையில் மாண்ட வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகியோர்.

அலை கடலுக்கப்பால் சிங்கப்பூர், ரங்கூன் (பர்மா), பிரின்ஸ் ஆப் வேல்ஸ், அந்தமான் தீவுச்சிறைச்சாலைகள், மாண்ட் காமரி, மூல்டான், நாபா (ப்ஞ்சாப்),அமராவதி, நாகபுரி, நாசிக்(மகாராஷ்ட்ரம்), சபர்மதி(குஜராத்), ராஜமகேந்திரபுரம் (ராஜமுந்திரி), பெல்லாரி, விசாகப்பட்டினம்,(ஆந்திரம்), திருவனந்தபுரம்,கல்ளிக்கோட்டை,கண்ணனூர் (கேரளம்) டில்லி ஆகிய மொழி வேறுபாடுடைய இடங்களில் இருந்த சிறைச்சாலைகளிலும் தமிழகத்துத் தேசபக்தர்கள் அல்லலுற்றனர். இறந்தோர் எண்ணிக்கைகும் கணக்கு் இல்லை.


நன்றி: rssairam99@gmail.com

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.