Sep 8, 2010

ம.பொ.சி நூல்கள் அரசுடமை: கருணாநிதி அறிவிப்பு

சிலம்புச் செல்வர் என்று புகழப்படும் ம.பொ.சிவஞானத்தின் நூல்கள்நாட்டுடமையாக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


சிலம்புச் செல்வர், ம.பொ.சி. என அன்புடன் அழைக்கப்பட்டவர் ம.பொ.சிவஞானம்.ஆந்திர மாநிலத்துடன் இணையும் அபாயத்தில் இருந்த சென்னை, திருத்தணி ஆகியஊர்களை தமிழகத்துடன் இணைக்க அரும்பாடுபட்டவர் ம.பொ.சி. இதனால் அவரைதலைநகர் காத்த தமிழர் என்றும் கூறுவார்கள்.

ம.பொ.சி.யின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. இந்தநிகழ்ச்சியில் தனது உடல்சுகவீனத்தையும் பொருட்படுத்தாமல் முதல்வர் கருணாநிதிகலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், நான் ஓய்வடுத்துக் கொள்ளக் கூடாது என்றுகூறினார் ராஜாராம். அவர் சொன்னது, அரசியலிலே இருந்து, சமுதாயத்தொண்டுகளில் இருந்து, தமிழர்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளில் இருந்துஎன்றுதான் பொருள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாறாக, மருத்துவர்கள் சொல்லுகின்ற ஓய்வைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர்நிச்சயமாக சொல்லியிருக்க மாட்டார்.

எனது உடல் நலம் சரியில்லாததால், வாக்காளர்களுக்கு நன்றி சொல்லுகின்ற கூட்டம்ரத்து செய்யப்பட்டது.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். ஆற்ற வேண்டிய கடமைகைளை,அன்றைக்கு ஆற்றியிருக்க வேண்டிய கடமைகளை இன்னொரு நாளைக்குக் கூடஆற்ற முடியும்.

வாக்காளர்களுக்கு நன்றி செலுத்துகிற கூட்டம் அப்படித்தான். அந்தக் கூட்டத்தைஇன்னொரு நாள் கூட வைத்துக் கொள்ளலாம்.

ஆனால், இது நாட்டுக்கு உழைத்த, ஒரு பெருமகனுக்கு காலமெல்லாம்சுதந்திரத்திற்காகவும், இந்திய நாட்டின் விடுதலைக்காகவும் அருந்தொண்டாற்றியம.பொ.சி.க்கு செய்கிற சிறப்பு என்பதால் இந்த விழாவில் கொள்ளாமல் இருந்தால்அது எனது வாழ்க்கை வரலாற்றில் பெரும் குறையாக ஆகி விடும்.

ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டும், திராவிட இயக்கம் தலைஎடுத்து விடக் கூடாது என்று கங்கனம் கட்டிக் கொண்டுசெயல்பட்டவர்தான் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.

அவரை நாங்கள் வெற்றி கொண்டோம். எப்படி? அவரே பரவாயில்லை என்றுஎங்களைப் பாராட்டுகிற விதத்தில் வெற்றி கொண்டோம்.

பாஞ்சாலங்குறிச்சியில் மாவீரன் கட்டபொம்மனின் கோட்டையை புதுப்பித்துக்கட்டினோம். அந்த விழாவுக்கு வந்திருந்த ம.பொ.சி. சென்னையில் வள்ளுவர்கோட்டம், பின்னர் பூம்புகார், இப்போது பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை.

இதையெல்லாம் இருந்து பார்க்க அண்ணா இல்லை. இருந்தாலும் அண்ணாவின்இடத்தில் நான் இருந்து உங்களை வாழ்த்துகிறேன் என்று என்னைப் பாராட்டினார்.

கள்ளக்குடி கொண்டான் என்ற பட்டத்தை அவர்தான் எனக்கு வழங்கினார்.மற்றவர்களைப் பாராட்டுவதில் சளைக்காதவர். தமிழுக்காக உழைக்கிற யாராகஇருந்தாலும் மனதார பாராட்டுவார். தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவார்.

நம்முடைய ம.பொ.சி எழுதிய நூல்களை அரசுடமைக்க முடிவு செய்துள்ளேன். அவர்எழுதிய நூல்கள் நூற்றுக்கணக்கானவை என்பதால் அதைக் கருத்தில் கொண்டு ரூ. 20லட்சம் பரிவுத் தொகையாக அவரது குடும்பத்தினருக்க வழங்கப்படும்.

சிலம்புச் செல்வருக்கு நிச்சயமாக இந்த அரசின் சார்பில் எதற்காகவாவதுஇல்லாவிட்டாலும் கூட, தலைநகரை காப்பாற்றிக் கொடுத்த அந்த ஒரு கடமைக்காவதுதலைநகர் காத்த தமிழ்ச் செல்வர் ம.பொ.சி. என்ற பெயரில் சிலை அமைக்கப்படும்என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல ஆகஸ்ட் 15ம் தேதி ம.பொ.சியின் தபால் தலையும் வெளியிடப்படும்என்றார் கருணாநிதி. நிகழ்ச்சியில் ம.பொ.சி. எழுதிய சில நூல்களை கருணாநிதிவெளியிட தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் பெற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், முன்னாள் சபாநாயகர் ராஜாராம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நன்றி: thatsontamil.com, 02.07.2006

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.