Nov 3, 2010

சிலம்புச் செல்வர் சிவஞானம்


கவிஞர் மா. வழித்துணைவன்

நன்றி: முல்லைச்சரம் 


நாட்டினில் அடிமை நாட்டம்
     நரம்பினில் ஊறிப் போகும்
கேட்டினைக் களைந்தெ டுக்கக்
     கிளர்ச்சிகள் செய்தோன் மேலும்
வீட்டினில் கட்ட பொம்மன்
     வீரமும் பரப்பி, வறுமை
வாட்டியும் செம்மை கண்டோன்
     வள்ளலார் நெறியைக் கொண்டோன்.

இமைத்திடு போதில் எல்லாம்
     தமிழென இயம்பும் பார்வை
அமைத்திடு போராட் டங்கள்
     அன்னையின் ஆக்கத் திற்கே
சமைத்திட தமிழ்மா நிலத்தைச்
     சாகவும் முதலில் நின்றோன்?
சுமையென அல்லல் சூழ்ந்தும்
     வ.உ.சியின் வழியில் ம.பொ.சி

சிவஞானம் என்று செப்பில்
     சிலம்புச் செல்வர் என்பர்
அவமானம் தமிழர்க் கென்றால்
     அனலைத் தெறித்த சிலம்பு
உவமானம் இல்லாத் தலைவன்
     குறளின் உயர்வை உறைத்தோன்
சிலகாலம் வாழ்ந்தி ருந்தால்
     சீர்பட் டிருப்பர் தமிழர்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.