Nov 16, 2010

திரைத் துறையில் சிலம்புச் செல்வர் செய்த சேவை

- நா. கிருஷ்ணமூர்த்தி

நன்றி: இளந்தமிழன், ஜூலை 2010

திரைப்படத் துறையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் தமிழரசுக் கழகத்தில் பணியாற்றியவர்கள் டி. கே. சண்முகம் அண்ணாச்சி, ஏ. பி. நாகராஜன், எம். ஏ. வேணு, டி. கே. பகவதி, கவிஞர். கா. மு. ஷெரீப், கவிஞர் கு. மா. பாலசுப்ரமணியம், கவிஞர். கு. சா. கிருஷ்ணமூர்த்தி, சின்ன அண்ணாமலை, உசிலை சோமநாதன், கவிஞர் வானம்பாடி ஆகியோராவர்.

1953 ஆம் வருடம் ஏ. பி. நாகராஜன் அவர்கள் தயாரித்துக் கதாநாயகனாக நடித்த நால்வர் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஓரங்க நாடகம் பின்னர் சினிமாவாக எடுக்கப்பட்டது.

1956 இல் ஏ. பி. நாகராஜன் அவர்களின் படம் பெண்ணரசியில் பிரிவினை கூடாது. மக்கள் சுயாட்சி உரிமை வேண்டுமென்று என்ற கொள்கையைக் கூற எடுத்த படம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் கதையைப் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் அவர்களுடன் படம் எடுக்க ஒப்பந்தம் செய்திருந்தார் சிலம்புச்செல்வர் ம. பொ. சி. அதைக் காரைக்குடி கொத்தமங்கலம் சுப்புவின் மூலம் திரும்பப் பெற்று, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மூலம் நாடகமாகச் சென்னை கோகலே மன்றத்தில், மூதறிஞர் ராஜாஜி தலைமையில் அரங்கேறினார்.

பின்னாளில் பத்மினி பிக்சர்ஸ் பி. ஆர். பந்துலுவின் தயாரிப்பில் எடுக்கப்பட்ட திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மனின் ஒவ்வொரு அடியும் ம.பொ.சியின் முன்னிலையில் எடுக்கப்பட்டது.

கெய்ரோவில் நடந்த உலகப்பட விழாவில் சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் அவர்களும், சிறந்த படமாக வீரபாண்டிய கட்டபொம்மனும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்படம் உலகமெங்கும் உள்ள மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

1961 ஆம் வருடம் சென்னையில் பெண்கள் சிறைச்சாலையில் உரையாற்ற சென்ற இடத்தில் அரவாணிகள் பட்ட கஷ்டங்களை நேரடியாக விசாரித்து அவர்கள் படும் துயரத்தைத் தனது பத்திரிகையான செங்கோல் இதழில் தலையங்கக் கட்டுரையாக எழுதி அவர்களுக்குரிய முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார். இன்று அவர்கள் வட மாநிலத்தில் சட்ட மன்ற உறுப்பினராக இருக்கிறார்கள். வட மாநிலத்தில் வழி காட்டிய தெய்வம் ம.பொ.சி என்று போற்றிப் பாராட்டுகிறார்கள்.

ஆண்டுதோறும் திருத்தணியில் சிலம்புச் செல்வருடைய சிலைக்கு மாலை அணிவித்து மாநாடு நடத்தி, பல கோரிக்கைகளை முன் வைத்து அரசாங்கத்திடம் பல சலுகைகள் பெற்று அரவாணிகள் வாழ்ந்து வருகிறார்கள். 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.