Jan 8, 2011

ம.பொ.சிவஞானம் - நாம் அறிந்ததும் அறியாததும் - கருத்தரங்கம்

இலக்கியக் களம் அமைப்பின் சார்பில் 09.01.11 அன்று காஞ்சிபுரம் இரயில்வே சாலை பூமாலை வணிக வளாகத்தில் காலை பத்து மணிக்கு விடுதலைப் போராளி, வடக்கெல்லை மீட்டவர், சிலம்புச் செல்வர், தமிழ்த் தேசிய முன்னோடி "ம.பொ.சிவஞானம் - நாம் அறிந்ததும் அறியாததும்" என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நிகழ்த்தப்பட உள்ளது.

ச. காஞ்சி அமுதன் தலைமையில், கவிஞர் அமுதகீதன் முன்னிலை வகிக்க,ம.பொ.சி ஆய்வாளர் பெ.சு.மணி கருத்துரை வழங்க உள்ளார்.

கவிஞர் இராசேந்திரபாபு, கவிஞர் தி.பரமேசுவரி ஆகியோரும் உரையாற்ற உள்ளனர். அனைவரும் வருக.

தொடர்புக்கு: அ. எக்பெர்ட் சச்சிதானந்தம் 9442568566, அமுதகீதன் 9994786873.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.