Feb 4, 2011

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. உருவச்சிலை

 நன்றி: தினமணி

சென்னை, பிப்.4: விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான ம.பொ.சிவஞானத்தின் உருவச்சிலையை முதல்வர் கருணாநிதி சென்னையில் பிப்ரவரி 9-ம் தேதி திறந்துவைக்க உள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. உருவச்சிலை சென்னையில்  நிறுவப்படுமென்று ஏற்கனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.  அதனையொட்டி, ரூ. 6 லட்சம் செலவில் சிலை செய்யும் பணிகள்       சிற்பி கிஷோர் நாகப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  அப்பணியில் சில தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்பட்டிருந்த இடர்ப்பாடுகள் களையப்பட்டு, தற்போது  8 அடி உயரம் உடைய முழு உருவச்சிலை செய்து முடிக்கப்பட்டுள்ளது.

சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் வெண்கலத்தாலான உருவச்சிலையினை 2011 பிப்ரவரி 9 ஆம் தேதி, புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை தியாகராயநகர்-போக் ரோடு சந்திப்பில் முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. தாமதம் சற்றே வருத்தத்தைத் தந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்தச் செய்தியை இங்கே வெளியிடுகிறேன்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.